بلا عنوان

இலவச விடுமுறை கால பயிற்சி வகுப்புகள்


பள்ளி மாணவர்களுக்கு சார்ட்டில் பெயின்டிங் வரைதல் ,நியூஸ் பேப்பரில் இருந்து ஆல்பம் தயாரித்தல் , நாடகம் எவ்வாறு நடிப்பது ? ,கம்மி செலவில் அறிவியில் உபகரணங்கள் தயாரித்தல் பயிற்சி

                         தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்  விடுமுறை நாள் இலவச பயிற்சி நடைபெற உள்ளது.

                            இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தெரிவித்துள்ளதாவது: இப்பள்ளி வளாகத்தில்  வருகின்ற 26ம் தேதி புதன்  கிழமை முதல் 29ம் தேதி சனிக்கிழமை வரை தினமும் காலை 10 மணி முதல் மதியம்  12.30 மணி வரை விடுமுறை கால பயிற்சி முகாம் இலவசமாக நடைபெற உள்ளது.பயிற்சி முகாமில் சார்ட்டில் பெயின்டிங் வரைதல் ,நாடகம் எவ்வாறு நடிப்பது ? ,நியூஸ் பேப்பரில் இருந்து ஆல்பம் தயாரித்தல் , கம்மி செலவில் அறிவியில் உபகரணங்கள் தயாரித்தல் பயிற்சி நடைபெற உள்ளது. இதனில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று பலன் பெறலாம்.அனுமதி இலவசம் .பயிற்சி தொடர்பான மேலும் தகவல்களுக்கு 9786113160 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தெரிவித்து உள்ளார்.


இடம் : பள்ளி வளாகம்

பயிற்சி : 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை

நேரம் : காலை 10 மணி முதல் மதியம்  12.30 மணி  வரை


26-12-2018 முதல் நாள் பயிற்சி : ஓரிகாமி பயிற்சி -சார்ட்டில் பெயின்டிங் வரைதல் ,நியூஸ் பேப்பரில் இருந்து ஆல்பம் தயாரித்தல்

27-12-2018  இரண்டாம் நாள் பயிற்சி :கம்மி செலவில் அறிவியில் உபகரணங்கள் தயாரித்தல் மற்றும் எளிமையான அறிவியல் சோதனைகள் செய்து காட்டல் பயிற்சி 

28-12-2018 மூன்றாம் நாள் பயிற்சி : ஆளுமை வளர்த்தல் தொடர்பான பயிற்சி 

29-12-2018 நான்காம் நாள் பயிற்சி :நாடகம் நடிப்பது எப்படி என்பது தொடர்பான பயிற்சி மற்றும் சிறு விளையாட்டுக்கள் 



இப்பயிற்சி விடுமுறை நாளில் இப்பள்ளியில் நடைபெறுவது இது இரண்டாவது முறையாகும்.



தொடர்புக்கு : 8056240653




Click here to read more

إرسال تعليق

أحدث أقدم