தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள், காலியிடங்களை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு!



தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர் மற்றும் காலியிடங்கள் குறித்த விபரங்களை தாக்கல் செய்யுமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின், சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகளை தொடங்கியுள்ளது.

இந்த வகுப்புகளுக்கு அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்துள்ளனர். அதில், ‘‘எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகள் நடத்தும் ஆசிரியர்கள் இதற்குரிய கிண்டர் கார்டன் பயிற்சி அல்லது மாண்டிசோரி கல்வி முடித்திருக்க வேண்டும். விதிகைள மீறி, இடைநிலை ஆசிரியர்களை எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு ஆசிரியர்களாக நியமிக்க தடை விதிக்க வேண்டும். இதற்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தனர்.

இந்த மனுக்களை நேற்று விசாரித்த நீதிபதி ஆர்.சுப்ரமணியன், தமிழகத்திலுள்ள தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் எவ்வளவு ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர்? எவ்வளவு ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது என்பது குறித்த விபரங்களை, தொடக்க கல்வி இயக்குனர் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தார்.


Click here to read more

إرسال تعليق

أحدث أقدم